top of page

Aḻakāṉa bālam'mā

Writer's picture: asha manoharanasha manoharan


அழகான பாலம்மா

Aḻakāṉa bālam'mā


அழகான பாலம்மா

ஆனந்தம் தாரும் அம்மா

குழந்தையாய் வடிவு எடுத்து

ஓடி இங்கே வாரும் அம்மா (2)

Aḻakāṉa bālam'mā

āṉantham tārum am'mā

kuḻantaiyāy vaṭivu eṭuttu

ōṭi iṅkē vārum am'mā (2)


கையை நீட்டி அணைக்க முயன்றால்

முத்தம் இட்டு ஓடி மறைந்தாய்

கண்ணை மூடி மறக்க நினைத்தால்

தட்டி எழுப்பி சிரித்தே மகிழ்ந்தாய் (2) (அழகான)

Kaiyai nīṭṭi aṇaikka muyaṉṟāl

muttam iṭṭu ōṭi maṟaintāy

kaṇṇai mūṭi maṟakka niṉaittāl

taṭṭi eḻuppi cirittē makiḻntāy (2) (aḻagāṉa)


மாலை தொடுத்தேன் மலர்கள் கொண்டு

பாமாலை தான் வேண்டும் என்றாய்

வார்த்தை கொடுத்தாய் கீதம் இணைக்க

பாட்டை கேட்டு சிரித்தே நின்றாய்(2) (அழகான)

Mālai toṭuttēṉ malarkaḷ koṇṭu

pāmālai tāṉ vēṇṭum eṉṟāy

vārttai koṭuttāy kītam iṇaikka

pāṭṭai kēṭṭu cirittē niṉṟāy (2) (aḻagāṉa)


இனிமை ததும்பும் உந்தன் வார்த்தை

கேட்க கேட்க நிறையும் என் மனம்

ரசிக்க வேண்டி இன்னும் கேட்டால்

சைகை செய்து மாட்டேன் என்பாய் (2) (அழகான)

Iṉimai tatumbum untaṉ vārttai

kēṭka kēṭka niṟaiyum eṉ maṉam

racikka vēṇṭi iṉṉum kēṭṭāl

caikai ceytu māṭṭēṉ eṉpāy (2) (aḻagāṉa)

3 views0 comments

Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page