![](https://static.wixstatic.com/media/e07f28_6ec72afc453e44e7a0abb3aed790cc14~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/e07f28_6ec72afc453e44e7a0abb3aed790cc14~mv2.jpg)
பாலே உந்தன் நினைவிலே
Bālē untaṉ niṉaivilē
பாலே உந்தன் நினைவிலே
அனுதினம் வாழ்கின்றேன்
அனைத்தையும் அறிந்தவள்
மௌனம் இன்று காப்பது ஏன்? (பாலே)
Bālē untaṉ niṉaivilē
aṉutiṉam vāḻkiṉṟēṉ
aṉaittaiyum aṟintavaḷ
mauṉam iṉṟu kāppatu ēṉ? (Bālē)
தாமரை மீதிலே
வீற்றீருக்கும் பதுமை நீ
மண்ணும் விண்ணும் உனை போற்ற
தியானம் கலைக்க மறுப்பதே ஏன்? (பாலே)
Tāmarai mītilē
vīṟṟīrukkum patumai nī
maṇṇum viṇṇum uṉai pōṟṟa
tiyāṉam kalaikka maṟuppatē ēṉ? (Bālē)
செவ்வண்ண மேனி கொண்டவளே
துள்ளி ஆடும் சின்னவள் நீ
பக்தர்கள் நாடும் அன்னையவள்
புன்னகை பூக்க மறந்தது ஏன்? (பாலே)
Cevvaṇṇa mēṉi koṇṭavaḷē
tuḷḷi ākum ciṉṉavaḷ nī
paktarkaḷ nāṭum aṉṉaiyavaḷ
puṉṉakai pūkka maṟantatu ēṉ? (Bālē)
காயமே உன் உறைவிடம்
வாய்மையே அதன் வாசலாகும்
பூஜை ஏற்க வந்திடவே
தாமதம் ஏனடி பெண்ணே (பாலே)
Kāyamē uṉ uṟaiviṭam
vāymaiyē ataṉ vācalākum
pūjai ēṟka vantiṭavē
tāmatam ēṉaṭi peṇṇē (Bālē)
Comments