![](https://static.wixstatic.com/media/e07f28_979605659425408bbad7ce166f13f157~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/e07f28_979605659425408bbad7ce166f13f157~mv2.jpg)
மாயே குமரியடி
Māya kumariyaṭi Bālē
மாய குமரியடி பாலே
காந்தம் போல் இழுக்க்கின்றாள்(2)
அன்பினை ஊட்டியே பாலே
அஞ்சேல் அஞ்சேல் என காத்தாள் (மாய)
Māya kumariyaṭi bālē
kāntam pōl iḻukkkiṉṟāl(2)
aṉpiṉai ūṭṭiyē bālē
añcēl añcēl eṉa kāttāḷ (māya)
சித்திரை நிலவு அவள் பாலே
என் சிந்தையில் உறைந்திட்டாள்
வைகாசி விசாகம் தான் பாலே
ஜோதியின் ரூபம் தரித்து நின்றாள் (மாய)
Cittirai nilavu avaḷ bālē
eṉ cintaiyil uṟaintiṭṭāḷ
vaikāci vicākam tāṉ bālē
jōtiyiṉ rūpam tarittu niṉṟāḷ (māya)
ஆனிவேர் அவள் பாலே
ஆடி ஆடி ஆனந்தம் தந்தாள்
ஆவணி விரதம் பூண்டு வந்தால்
புன்னகை அரும்பி மங்களம் தருவாள் (மாய)
Āṇivēr avaḷ bālē
āṭi āṭi āṉantam tantāḷ
āvaṇi viratam pūṇṭu vantāl
puṉṉakai arumpi maṅkaḷam taruvāḷ (māya)
புரட்டாசி கொலு ஏறும் பாலே
வரம் தந்து காத்து நிற்பாள்
ஐப்பசி மழையாய் பாசம் பொழிவாள்
கார்த்திகை தீபமாய் காத்து அருள்வாள் (மாய)
Puraṭṭāci kolu ēṟum bālē
varam tantu kāttu niṟpāḷ
aippaci maḻaiyāy pācam moḻivāḷ
kārttikai tīpamāy kāttu aruḷvāḷ (māya)
இனிய மார்கழி தானவள் பாலே
மலை போல் இன்னலை பனிபோல் துடைப்பாள்
தத்தை தை தை ஜதி சேர்த்து
மாசில்லா உறவு பங்குனி(பங்கிட்டு) கொள் என்றாள்(மாய)
ṉiya mārkaḻi tāṉavaḷ bālē
malai pōl iṉṉalai paṉipōl tuṭaippāḷ
tattai tai tai jati cērttu
mācillā uṟavu paṅkuṉi(paṅkiṭṭu) koḷ eṉṟāḷ(māya)
Comments