![](https://static.wixstatic.com/media/e07f28_03c978197d5748de870b8770950356bc~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/e07f28_03c978197d5748de870b8770950356bc~mv2.jpg)
பாலையே உனை நான் Bālaiyē uṉai nāṉ பாலையே உனை நான், கண்ட நாள் முதலே ஆனந்தம் கொண்டேனடி; மலர்ந்த இதயம், பரவசம் ஆகுதே பாலையே, உனையே அழைக்குதே மனம் இங்கே (2) Bālaiyē uṉai nāṉ, kaṇṭa nāḷ mutalē āṉantam koṇṭēṉaṭi; malarntha itayam, paravacam ākutē pālaiyē, uṉaiyē aḻaikkutē maṉam iṅkē (2) சொந்தம் பந்தம் என்று, அலைந்த மனதை சொந்தமாய் ஆக்கிக் கொண்டாய் பற்று மற்று என்று அலைந்த மனதை பற்றுக என்னை என்றாய் பாலையே, உனையே அழைக்குதே மனம் இங்கே (பாலையே) Contam pantam eṉṟu, alainta maṉatai contamāy ākkik koṇṭāy paṟṟu maṟṟu eṉṟu alainta maṉatai paṟṟuka eṉṉai eṉṟāy bālaiyē, uṉaiyē aḻaikkutē maṉam iṅkē (Bālaiyē) சிப்பிக்குள் முத்து வைத்தாய் உடலுள் உயிர் வைத்தாய் எண்ணத்தில் உன்னை வைத்தாய் மறுத்து மறுத்து வாழ்ந்த மனதை மறித்தே ஏற்றுக் கொண்டாய் பாலையே, உனையே அழைக்குதே மனம் இங்கே (பாலையே) Cippikkuḷ muttu vaittāy uṭaluḷ uyir vaittāy eṇṇattil uṉṉai vaittāy maṟuttu maṟuttu vāḻnta maṉatai maṟittē ēṟṟuk koṇṭāy pālaiyē, uṉaiyē aḻaikkutē maṉam iṅkē (Bālaiyē) ஜோதிக்குள் ஒளியாய், உயிருள் விதையாய் அறிவில் அறமாய், காட்சி தந்தாய் சரணம் சரணம், என்னும் மனதை சரணம் கொடுத்தே நின்றாய் பாலையே, உனையே அழைக்குதே மனம் இங்கே (பாலையே) Jōtikkuḷ oḷiyāy, uyiruḷ vitaiyāy aṟivil aṟamāy, kāṭci tantāy caraṇam caraṇam, eṉṉum maṉatai caraṇam koṭuttē niṉṟāy pālaiyē, uṉaiyē aḻaikkutē maṉam iṅkē (pālaiyē)
Comentários