![](https://static.wixstatic.com/media/e07f28_0bbe5b3258d849ff8b3ac82e4fdc2d66~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/e07f28_0bbe5b3258d849ff8b3ac82e4fdc2d66~mv2.jpg)
என் நினைவின் ஊஞ்சல்
Eṉ niṉaiviṉ ūñcal
என் நினைவின் ஊஞ்சலில்
பாலையே உனை நான் தாலாட்டாவே
அழைக்கின்றேன்… அழைக்கின்றேன்… (என் நினைவின்)
Eṉ niṉaiviṉ ūñcalil
Bālaiyē uṉai nāṉ tālāṭṭāvē
aḻaikkiṟēṉ… aḻaikkiṟēṉ… (eṉ niṉaiviṉ)
மண்ணில் மலரும் பூக்களும்
உந்தன் கழுத்தில் மாலையாகும்(2)
எந்தன் உடல் மண்ணில் சேரும்
உள்ளம் மட்டும் உனை நாடும்(2) (என் நினைவின்)
Maṇṇil malarum pūkkaḷum
untaṉ kaḻuttil mālaiyākum(2)
entaṉ uṭal maṇṇil cērum
uḷḷam maṭṭum uṉai nāṭum(2) (eṉ niṉaiviṉ)
நட்பில் வளர்ந்த உறவு நீ
அன்பில் திளைக்க வைத்தவள் நீ(2)
உன்னை பிரிந்த நொடி ஒன்றும்
என்னை மறந்த தினம் ஆகும்(2) (என் நினைவின்)
Naṭpil vaḷarnta uṟavu nī
aṉpil tiḷaikka vaittavaḷ nī(2)
uṉṉai pirinta noṭi oṉṟum
eṉṉai maṟanta tiṉam ākum(2) (eṉ niṉaiviṉ)
மௌனமே உந்தன் மொழி ஆகும்
கருணையே காட்சி ஆகும்(2)
உணர மறந்த உள்ளம் என்றும்
அமைதி இழந்து தவிக்க நேரும்(2) (என் நினைவின்)
Mauṉamē untaṉ moḻi ākum
karuṇaiyē kāṭci ākum(2)
uṇara maṟanta uḷḷam eṉṟum
amaiti iḻantu tavikka nērum(2) (eṉ niṉaiviṉ)
Comments